< Back
மாநில செய்திகள்
கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
திருப்பூர்
மாநில செய்திகள்

கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

தினத்தந்தி
|
21 July 2022 12:09 AM IST

நத்தக்காடையூர் அருகே குடிநீர் இணைப்பு மீண்டும் வழங்கக்கோரி கிராம மக்கள் தங்களது வீடுகளில்கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் ெகாடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நத்தக்காடையூர் அருகே குடிநீர் இணைப்பு மீண்டும் வழங்கக்கோரி கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு ெகாடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு கொடி

நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சி குட்டப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் 12 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை இந்த 12 குடும்பங்களை சேர்ந்த வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்பு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் துண்டிக்கப்பட்டது.

இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி2ப்பட்டனர்.எனவே குடிநீர் இணைப்பை மீண்டும் வழங்கக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்த காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் உடனடியாக விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடிவில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து மீண்டும் அப்பகுதியை சேர்ந்த 12 குடும்பங்களுக்கு இணைப்பு வழங்கி குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கட்டி இருந்த கருப்பு கொடியை அகற்றினர்.

Related Tags :
மேலும் செய்திகள்