விழுப்புரம்
விழுப்புரத்தில் பா.ஜ.க.வினர் சாலை மறியல்
|அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் பா.ஜ.க.வினர் சாலை மறியல்
விழுப்புரம்
சென்னையில் நேற்று பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நடந்த மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விழுப்புரம் காந்தி சிலை அருகில் நகர தலைவர் வடிவேல் பழனி தலைமையில் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொருளாளர் சுகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவ.தியாகராஜன், வர்த்தக அணி நிர்வாகி வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டு அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம் சமரசம் பேசி மறியலை கைவிடச்செய்தனர்.