< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க.வின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்கு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பா.ஜ.க.வின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்கு

தினத்தந்தி
|
31 March 2024 8:37 PM IST

வெறுப்பு பிரசாரம் செய்பவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

சென்னை,

சிறைச்சாலைகளில் இருக்க வேண்டியவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

"கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்! சிறைச்சாலைகளில் இருக்க வேண்டியவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள்! கலவரத்தை உருவாக்குபவர்கள் கமலாலயத்தில்...! பாலியல் வன்புணர்வாளர்கள் கமலாலயத்தில்...! மதவெறியை தூண்டுகிறவர்கள் கமலாலயத்தில்...!

குண்டு வெடிப்பு குற்றவாளிகள் கமலாலயத்தில்...! குண்டு தயாரிப்பாளர்களும் கமலாலயத்தில்...! ஊழல்வாதிகள் கமலாலயத்தில்...! போலி செய்திகளை பரப்புபவர்கள் கமலாலயத்தில்...! வெறுப்பு பிரசாரம் செய்பவர்கள் கமலாலயத்தில்! மொத்தத்தில் பா.ஜ.க.வின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்" என்று தெரிவித்து உள்ளார்.



மேலும் செய்திகள்