தென்காசி
சங்கரன்கோவிலில் பா.ஜ.க. இளைஞரணி மாநாடு
|சங்கரன்கோவிலில் பா.ஜ.க. இளைஞரணி மாநாடு நடந்தது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மாநாடு சங்கரன்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் திலகர் முப்பிடாதி தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜேஷ் ராஜா, பார்வையாளர் மகாராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமநாதன், ராமராஜா, மாவட்ட செயலாளர்கள் ராஜலட்சுமி சுந்தர்ராஜ், சுப்பிரமணியன், நகர தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மகளிர் அணி தலைவி மகேஸ்வரி வரவேற்று பேசினார்.
மாநில விவசாய அணி துணைத்தலைவர் ஜெயக்குமார், பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் கதிரேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சங்கரன்கோவில் விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டி, பட்டியல் அணி தலைவர் ராமர், நகர இளைஞரணி தலைவர் விக்னேஷ், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் அந்தோணி ராஜ், நிர்வாகிகள் ரஞ்சித், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய அணி தலைவர் நாகராஜ் நன்றி கூறினார்.