< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
400க்கும் மேற்பட்ட தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும் - அண்ணாமலை பேச்சு
நாடாளுமன்ற தேர்தல்-2024

400க்கும் மேற்பட்ட தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும் - அண்ணாமலை பேச்சு

தினத்தந்தி
|
19 March 2024 1:53 PM IST

தமிழ்நாட்டின் பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி என்று அண்ணாமலை கூறினார்.

சேலம்,

நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பா.ஜ.க. வின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

முன்னதாக பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

தமிழ்நாட்டின் பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி. 400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கும். ராமதாசின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்றார். ஜூன் 4-ம் தேதி 400க்கு மேல்" என சேலம் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை புது முழக்கம் எழுப்பினார்.

மேலும் செய்திகள்