< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் பா.ஜ.க இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்- எல்.முருகன் பேட்டி
மாநில செய்திகள்

தமிழகத்தில் பா.ஜ.க இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்- எல்.முருகன் பேட்டி

தினத்தந்தி
|
1 Jun 2024 11:18 AM IST

மத்திய இணை மந்திரி எல்.முருகன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருகை தந்தார்

தூத்துக்குடி,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொள்வதற்காக மத்திய இணை மந்திரி எல்.முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

2014 ஆம் ஆண்டு 10வது இடத்தில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். 2027-க்குள் 3வது இடத்தை அடைந்து விடுவோம் என்பது, பிரதமர் மோடி கொடுத்துள்ள கேரண்டி. நிச்சயம் நாம் அதை அடைவோம். தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும். என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்