'தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர்கள் போட்டியிட்டாலும் டெப்பாசிட் கிடைக்காது' - கே.பாலகிருஷ்ணன்
|அனைத்து தொகுதிகளிலும் தமிழக மக்கள் பா.ஜ.க.வை டெப்பாசிட் இழக்கச் செய்வார்கள் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு டெப்பாசிட் கூட கிடைக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர்கள் யாராவது தமிழகத்தில் போட்டியிட்டு டெப்பாசிட் வாங்கி காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் நிச்சயமாக பா.ஜ.க. 40 தொகுதிகளிலும் தோற்கப்போவது மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும் தமிழக மக்கள் பா.ஜ.க.வை டெப்பாசிட் இழக்கச் செய்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்திற்கு பல ஆண்டுகளாக பா.ஜ.க. எதுவுமே செய்யவில்லை. சமீபத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிவாரணம் தரவில்லை."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.