தமிழகத்தில் பா.ஜனதா 25 சதவீத வாக்குகளை பெறும்: தேஜஸ்வி சூர்யா
|பா.ஜனதா தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். என்று பா.ஜனதா தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ஜனதா தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். என்று பா.ஜனதா தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜனதா சிந்தனையாளர் பிரிவு கலந்துரையாடல் கூட்டம் சென்னை வேப்பேரியில் நடைபெற்றது. இதில், பா.ஜனதா தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா கலந்து கொண்டு கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் அரசியல் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. பா.ஜனதா தொண்டர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் புத்துணர்ச்சியுடன் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜனதா தமிழகத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளனர் என்பதை இந்தியா மட்டுமல்லாது உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்த தேர்தலில், தமிழகத்தில் பா.ஜனதா 25 சதவீத ஓட்டுகளை நிச்சயம் பெறும். கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும். மத்தியில் பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார். நிச்சயம், பா.ஜனதா தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். வருகிற ஜூன் 4-ந்தேதி அதை அனைவரும் உணர்வார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.