< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
பா.ஜ.க. மாவட்ட தலைவர் மீது போலீசில் திருநங்கை புகார்
|21 July 2022 9:18 AM IST
பா.ஜ.க. மாவட்ட தலைவர் மீது திருநங்கை ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார்.
சென்னை ஓட்டேரி, பிரிக்ளின் சாலையைச் சேர்ந்தவர் ராஜா என்ற ரதி (வயது 40). திருநங்கையான இவர், பா.ஜ.க. சார்பில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 76-வது வார்டில் போட்டியிட்டார். இவர், தலைமைச்செயலக காலனி போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார்.
அதில், "பா.ஜ.க. வடசென்னை மேற்கு மாவட்ட தலைவராக உள்ள கபிலன், தனது ஆதரவாளர்கள் மூலம் அவ்வப்போது தகாத வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுப்பதாகவும், தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு கபிலன் மட்டுமே காரணம் என்றும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும்" கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநங்கை ரதி, கட்சியில் கேட்ட பதவி கொடுக்கப்படாததால் மாவட்ட தலைவர் மீது பொய் புகார் கொடுத்து உள்ளதாக கபிலன் தரப்பில் கூறப்படுகிறது.