< Back
மாநில செய்திகள்
நாளை கவர்னரை சந்திக்கும் பாஜக மேலிடக்குழு
மாநில செய்திகள்

நாளை கவர்னரை சந்திக்கும் பாஜக மேலிடக்குழு

தினத்தந்தி
|
27 Oct 2023 10:29 PM IST

மாவட்டம் வாரியாக தமிழ்நாடு அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை நால்வர் குழு இன்று சந்தித்தது.

சென்னை,

சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டுக்கு முன்பு நடப்பட்ட பாஜக கொடி கம்பத்தை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதனால் தமிழக அரசு பாஜகவை வெறுப்புணர்வுடன் கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மாநில அரசால் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் நட்டா அமைத்துள்ளார். இதன்படி சதானந்த கவுடா, சத்ய பால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் கொண்ட குழு இன்று தமிழ்நாட்டுக்கு வந்தது.

இதனையடுத்து மாவட்டம் வாரியாக தமிழ்நாடு அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை நால்வர் குழு இன்று சந்தித்தது.

இந்நிலையில் சென்னை, கிண்டியில் நாளை பிற்பகல் கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக மேலிடக்குழு சந்திக்க உள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களிடம் இருந்து முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக் கொண்ட நிலையில் நாளை கவர்னர் உடன் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்