< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க. சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

பா.ஜ.க. சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

தினத்தந்தி
|
19 Jun 2023 12:45 AM IST

பா.ஜ.க. சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

ஆலங்குளம்,

ஆலங்குளம், டி.என்.சி. முக்கு ரோட்டில் பா.ஜ.க. ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்கதெருமுனை பிரசார பொதுகூட்டம் தேசிய மொழிகள் பிரிவு சார்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட தேசிய மொழிகள் பிரிவு தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். விருதுநகர் மேற்கு மாவட்ட தேசிய மொழிகள் பிரிவு செயலாளர் அய்யப்பன் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். பா.ஜ.க.வின் மாநில, மாவட்ட, ஒன்றிய, சட்டமன்ற நிர்வாகிகள் ரமணி, ராஜாராம், வெங்கடேஷ், சரவணன், ராதாகிருஷ்ணன், தங்கராஜ், ஞான பண்டிதன், ராமகிருஷ்ணராஜா, முருகேசன், ரவி கண்ணன், ராஜேஷ்கண்ணன், விஜயராகவன், கோவிந்தராஜ், ஸ்ரீராம், முத்துலட்சுமி, சந்தான மாரி, காளிராஜ், திருப்பதி, ஜோதிமுத்து, ஆதிலட்சுமி, மணியன் கிருஷ்ணசாமி, வெங்கிடாஜலபதி, உமாகாந்தன், காளவாசல் வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்