< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் திடீர் ஒத்திவைப்பு
|4 Oct 2023 4:48 PM IST
உடல்நலக்குறைவு காரணமாக அண்ணாமலையின் நடைபயணம் ஒத்திவைக்கப்படுவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
சென்னை,
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வந்தார். இதனிடையே தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசுவதற்காக அண்ணாமலை டெல்லி சென்றார்.
இதன் காரணமாக இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'என் மண், என் மக்கள்' 3-ம் கட்ட நடைபயணம், நாளை மறுநாள்(6-ந்தேதி) தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அண்ணாமலையின் நடைபயணம் வரும் 16-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.