< Back
மாநில செய்திகள்
நடிகர் கமல்ஹாசனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
மாநில செய்திகள்

நடிகர் கமல்ஹாசனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

தினத்தந்தி
|
7 Nov 2023 3:18 PM IST

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடன், நல்ல உடல் நலத்துடன், தனது கலைப் பணி மற்றும் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்