< Back
மாநில செய்திகள்
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 16-ம் தேதி டெல்லி செல்கிறார்
மாநில செய்திகள்

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 16-ம் தேதி டெல்லி செல்கிறார்

தினத்தந்தி
|
13 Feb 2024 9:55 AM IST

டெல்லியில் மத்திய மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து அண்ணாமலை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்காதநிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்படி வருகிற 16ம் தேதியன்று அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளார்.

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து அண்ணாமலை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. நடத்தும் ஆலோசனை கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கிறார். வருகிற 17 மற்றும் 18ந் தேதிகளில் பா.ஜ.க. சார்பாக தேர்தல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்