< Back
மாநில செய்திகள்
மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை
மாநில செய்திகள்

மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை

தினத்தந்தி
|
30 Oct 2022 5:52 AM GMT

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மதுரை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருக்கின்றனர்.

இந்த நிலையில், மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். மேலும் தன்னுடைய டுவீட்டரில்,

"தெய்வத் திருமகனார் தேசத்தை நேசித்தார். தெய்வீகத்தை வளர்த்தார். ஆன்மீகத்தில் ஆழமான பற்றுக் கொண்டார். வீரத்தின் விளை நிலமானார்.

இல்லார்க்கு ஏழைப்பங்காளர்.

தேசியத்தையும் தெய்வீகத்தையும் கண்ணாக காத்த தெய்வத்திருமகனார் பசும்பொன் தேவர் அய்யாவை வான்புகழ வணங்கி ஆசி பெறுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்