தஞ்சாவூர்
பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் பேச்சு
|மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்காவிட்டால் தி.மு.க. அரசை கண்டித்து ‘டெல்டா பந்த் 'நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறினார்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்காவிட்டால் தி.மு.க. அரசை கண்டித்து 'டெல்டா பந்த் 'நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறினார்.
ஆர்ப்பாட்டம்
காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக காங்கிரஸ் அரசையும், தண்ணீர் கேட்டு பெறாத தமிழக தி.மு.க. அரசையும் கண்டித்து பட்டுக்கோட்டையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார்.
தஞ்சை தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் தங்கவேல் வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், பட்டுக்கோட்டை நகர தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக காங்கிரஸ் அரசையும், தண்ணீர் கேட்டு பெறாத தமிழக தி.மு.க. அரசையும் கண்டித்து கோஷமிட்டனர். இதில் மாவட்ட பார்வையாளர் முரளிகணேஷ், தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
'டெல்டா பந்த்' நடத்தப்படும்
ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசியதாவது:-
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்டுவதை தடுக்காவிட்டால் தி.மு.க. அரசை கண்டித்து மாநில தலைவரிடம் அனுமதி வாங்கி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பாரத் பந்த் மாதிரி, 'டெல்டா பந்த்' நடத்தப்படும்.
இ்்வ்வாறு அவர் பேசினார்.