< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது - செல்லூர் ராஜு காட்டம்
|9 March 2023 11:33 AM IST
அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? செல்லூர் ராஜு கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பாஜகவினரிடம் சகிப்புத்தன்மை இல்லை. அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை. ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைவது என்பது இயல்பானது.
பாஜகவினருக்கு இதனை ஏற்க ஜீரன சக்தி இல்லை. அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை. ஊர்க்குருவி உயரப்பறந்தாலும் பருந்தாகாது. அதுபோல, எவனாலும் ஜெயலலிதாபோல ஆக முடியாது. சிலர் மூன்று பட்டம் வாங்கிவிட்டால் தன்னை பெரிய ஆள் என நினைத்துக்கொள்கிறார்கள்.
மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது என்றார்.