< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
|24 Sept 2023 9:37 PM IST
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கடந்த 20-ந்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தி.மு.க. தலைவர்கள் குறித்து எச்.ராஜா அவதூறாக பேசியதோடு, மத மோதலை உருவாக்கும் நோக்கத்தோடும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், திமுக தலைவர்கள், பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.