< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
|25 Sept 2022 12:15 AM IST
விழுப்புரத்தில் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
விழுப்புரம்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சிலரை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பா.ஜ.க.வினரின் வீடு, அலுவலகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், சென்னை நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட பா.ஜ.க. கட்சி அலுவலகம் மற்றும் வழுதரெட்டி சாலையில் புதிதாக கட்டி திறக்கப்படாமல் உள்ள பா.ஜ.க. கட்சி அலுவலகம் ஆகிய 3 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.