< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாஜகவினர் புதிய கொடிக்கம்பம் அமைக்க அனுமதி மறுப்பு..!
|1 Nov 2023 9:56 AM IST
அனுமதியின்றி கொடிக்கம்பம் வைத்தால் மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு அவை அகற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை,
நவம்பர் 1ம் தேதி(இன்று) முதல் நாள்தோறும் 100 கொடிக்கம்பங்கள் 100 நாட்களுக்கு நடப்படும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாஜகவினர் புதிய கொடிக்கம்பம் அமைக்க சென்னை போலீசார் அனுமதி அளிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற கடிதம் அளிக்கப்படவில்லை எனக்கூறி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், புதிய கொடிக்கம்பம் வைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனுமதியின்றி கொடிக்கம்பம் வைத்தால் மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு அவை அகற்றப்படும் எனவும் போலீசார் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.