< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

விலைவாசி உயர்வைக் கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
15 Nov 2022 4:28 PM IST

பால் விலை, மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க.சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

வந்தவாசி

பால் விலை, மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க.சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதன்படி ஆரணி பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர பா.ஜ.க. தலைவர் எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். இதில் நகர பார்வையாளர் கே.ஜெ. கோபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

இதே போல ஆரணியை அடுத்த சேவூரில் பஸ் நிறுத்தம் அருகே எம்.ஜி.ஆர்.சிலை முன்பாக ஆரணி வடக்கு மண்டல தலைவர் எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவருமான சி.ரவி இதில் சிறப்புரையாற்றினார்.

ஆரணியை அடுத்த மேல் சீசமங்கலம் கிராமத்தில் ஒன்றிய தலைவர் பி. பார்த்திபன் தலைமையில் ஆர்ப்பாதட்டம் நடந்தது. துணை தலைவர் எம்.சக்திவேல், பொதுச் செயலாளர் கே.தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட துணைத்தலைவர் பி. நித்தியானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் (நெசவாளர் பிரிவு) யோகநாதன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளானோர் கலந்து கொண்டனர்.

வந்தவாசி-கண்ணமங்கலம்

வந்தவாசி தேரடியில் நகரத் தலைவர் சுரேஷ் தலைமையிலும், வந்தவாசி மின்வாரிய அலுவலகம் எதிரில் வந்தவாசி மேற்கு ஒன்றிய தலைவர் என்.நவநிதி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாவட்ட பொதுச் செயலாளர் வி.முத்துசாமி, மாவட்ட செயலாளர் வி.குருலிங்கம் மற்றும் ஒன்றிய பொதுச் செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ேடார் கலந்து கொண் முழக்கங்களை எழுப்பினர். மேலும் தெள்ளார், மழையூர், கீழ்க்கொடுங்காலூர் பகுதிகளிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் மேற்கு ஆரணி வட்டார பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மண்டல தலைவர் எம் முருகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொது செயலாளர் சரவணன், கண்ணமங்கலம் நகர தலைவர் முத்துவேல் ்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு ஒன்றிய தலைவர் பாவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் இறைமாணிக்கம், மாவட்ட விவசாய அணி தலைவர் பிரகாஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் பிச்சாண்டிமுன்னிலை வகித்தனர். ஒன்றிய பொதுச்செயலாளர் வினோத்குமார் வரவேற்றார்.

இதில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்