செங்கல்பட்டு
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
|10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டில் வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், தமிழகத்தில் நடைபெறும் மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனையை ஒழிக்க வேண்டும், ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செம்பாக்கம் வேதா சுப்பிரமணியம் ஆலோசனை பேரில் வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியிலின அணி பொதுச்செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் கே.பாலமுருகன், ஒன்றிய ஓ.பி.சி. அணி தலைவர் கைலாச ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தனசேகர், பக்தவச்சலம் மற்றும் மகாராஜன்,
மங்கையர்கரசி, அஞ்சுகிளி, எம்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதிலை் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிளை தலைவர்கள் ஜோதிலிங்கம், ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி, சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.