< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 July 2023 12:15 AM IST

கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு நேற்று கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் மாடசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடலையூர் சாலை, சண்முகநகர் பகுதி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரிசுப்புராஜ், யூனியன் ஆணையாளர் ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்