< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
24 July 2023 2:09 PM IST

காஞ்சீபுரத்தில் பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு கொண்டிருந்தார். அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம் மாநகராட்சி, மாங்காடு நகராட்சி, குன்றத்தூர் நகராட்சி, உத்திரமேரூர் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளிலும் ஒன்றியம், கிராமங்கள் உள்ளிட்ட 264 இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மொளச்சூர் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ் பாபு தலைமை தாங்கினார். ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், வக்கீல்கள் பிரிவு மாவட்ட பார்வையாளர் சீதாசெந்தில் குமார், கிளை தலைவர் முனுசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் வாசன், பார்த்தசாரதி, ருத்ரகுமார், ஸ்ரீதர், எல்லம்மாள், சங்கர் மற்றும் மேற்கு மண்டல நகரத்தலைவர் ஜீவானந்தம் தலைமையில் அந்தந்த பகுதி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்