< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பா.ஜ.க. சார்பில் மரக்கன்று நடும் விழா
|25 Sept 2022 9:55 PM IST
கம்பத்தில் பா.ஜ.க. சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது
பாரதீய ஜனதா கட்சி நிறுவனர் தீனதயாள் உபாத்யாவின் பிறந்த நாளை ஸ்தாபகர் தினமாக நேற்று பா.ஜ.கவினர் கொண்டாடினர். இதையொட்டி நகர பா.ஜ.க. சார்பில் கம்பத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதற்கு நகர தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் மாரிச்செல்வம், பி.எம்.ஜெயராமன், பிரபு கிருஷ்ணா, எம்.சீனிவாசகம், சென்றாயப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் கலந்து கொண்டு 18-ம் கால்வாய் கரையின் இருபுறமும் 107 மரக்கன்றுகளை நட்டார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.