< Back
மாநில செய்திகள்
சனாதனம் குறித்து மாணவர்களிடையே திமுக நஞ்சை ஊட்டுகிறது - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
மாநில செய்திகள்

சனாதனம் குறித்து மாணவர்களிடையே திமுக நஞ்சை ஊட்டுகிறது - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

தினத்தந்தி
|
13 Sept 2023 5:04 PM IST

சனாதனம் குறித்து மாணவர்களிடையே திமுக அரசு நஞ்சை ஊட்டுகிறது என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு சனாதன எதிர்ப்பு குறித்து மாணவர்கள் கருத்து கூற திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கல்லூரி முதல்வரின் இந்த சுற்றறிக்கை அரசியல் அமைப்புக்கு எதிரானது இல்லையா? என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் திருவாரூர் அரசு கலைக்கல்லூரி, மாணவ, மாணவியர் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு "சனாதன எதிர்ப்பு" குறித்த கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டு கொண்டுள்ளது.

திமுக அரசு மாணவர்களின் மனதில் நஞ்சை ஊட்டுகிறது. இது அரசியல் அமைப்புக்கு எதிரானது இல்லையா??" என்று தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்