< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'ராமபிரானின் அனைத்து திருத்தலங்களிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது' - சு.வெங்கடேசன்
|14 July 2024 7:13 PM IST
ராமபிரானின் அனைத்து திருத்தலங்களிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது என சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
மதுரை,
தேவபூமி என அழைக்கப்படும் பத்ரிநாத் சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்த நிலையில், ராமபிரானின் அனைத்து திருத்தலங்களிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"அயோத்தி, பிரயாக் ராஜ், ராமநாதபுரம், நாசிக், ராம்டெக், சித்ர கூட் அதனைத் தொடர்ந்து நேற்று தேவபூமி பத்ரிநாத்திலும் தோல்வியடைந்துள்ளது பா.ஜ.க.
ஶ்ரீ ராமபிரானின் திருத்தலங்கள் அனைத்திலும் பா.ஜ.க. தோல்வி. தீமைகள் வீழ்த்தப்படுவதே ராமகதையின் நியதி."
இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.