< Back
மாநில செய்திகள்
பா.ஜனதா தலைவரை தி.மு.க. நிர்வாகி தாக்கியதாக புகார்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பா.ஜனதா தலைவரை தி.மு.க. நிர்வாகி தாக்கியதாக புகார்

தினத்தந்தி
|
29 March 2023 11:59 PM IST

பா.ஜனதா தலைவரை தி.மு.க. நிர்வாகி தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

அறந்தாங்கி தெற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவராக பதவி வகிப்பவர் சக்திவேல். இவர், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இந்தநிலையில் சக்திவேல் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள அதிகாரியிடம் குறைகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த தி.மு.க. நிர்வாகியும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரின் கணவருமான சண்முகநாதன் ஒப்பந்ததாரரும், பா.ஜனதா தலைவருமான சக்திவேலிடம் ஏன் சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகநாதன் சக்திவேலை தாக்கியதோடு அவரது செல்போனையும் கீழே போட்டு உடைத்ததாகவும் கூறப்படுகிறது. காயம் அடைந்த சக்திவேல் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் பா.ஜனதா தலைவரை தாக்கிய தி.மு.க. பிரமுகரை கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்