< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுடன் சேர்ந்து வயலில் இறங்கி நாற்று நட்ட பாஜக தலைவர் அண்ணாமலை..!
மாநில செய்திகள்

விவசாயிகளுடன் சேர்ந்து வயலில் இறங்கி நாற்று நட்ட பாஜக தலைவர் அண்ணாமலை..!

தினத்தந்தி
|
26 Nov 2023 1:02 PM IST

தஞ்சையில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலைக்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தஞ்சை,

தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். ராமேசுவரத்தில் தொடங்கி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

அந்த வகையில், இன்று பாஜக தலைவர் அண்ணாமலை தஞ்சாவூரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். குடமுருட்டி ஆற்றில் இறங்கி, காவிரிக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி அண்ணாமலை மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கருப்பூரில், விவசாயிகளுடன் சேர்ந்து வயலில் இறங்கி அண்ணாமலை நாற்று நட்டார். மேலும் விவசாயிகளுடன் டீ, வடை சாப்பிட்டு கலந்துரையாடினார்.

தஞ்சையில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலைக்கு தொண்டர்கள், பொதுமக்கள் அணி திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்