< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'இந்துக்களின் முதல் எதிரியே பா.ஜ.க. தான்' - திருமாவளவன் பேச்சு
|8 Nov 2023 9:43 PM IST
அ.தி.மு.க. தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்வது அவசியமானது என்று திருமாவளவன் தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்துக்கள் ஆகியோரின் முதல் எதிரியே பா.ஜ.க. தான். மக்களிடம் இயல்பாக இருக்கக்கூடிய மத உணர்வை பயன்படுத்திக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் மிக மோசமான ஒரு அரசியலை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து செய்து வருகின்றன.
அ.தி.மு.க. தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்வது அவசியமானது. தமிழ்நாட்டில் எதிர்கட்சியாக பா.ஜ.க.தான் இருக்கிறது, அ.தி.மு.க. இல்லை என்று காட்டிக்கொள்வதற்கான எல்லா முயற்சிகளையும் பா.ஜ.க. செய்து வருகிறது."
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.