< Back
மாநில செய்திகள்
கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயங்கொண்டம் நகராட்சி மேலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது பா.ம.க.வினர் புகார்
அரியலூர்
மாநில செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயங்கொண்டம் நகராட்சி மேலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது பா.ம.க.வினர் புகார்

தினத்தந்தி
|
10 July 2023 12:00 AM IST

கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயங்கொண்டம் நகராட்சி மேலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது பா.ம.க.வினர் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பா.ம.க. நகர செயலாளர் பரசுராமன் மற்றும் நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ஜெயங்கொண்டம் பா.ம.க. நகர செயலாளராக பதவி வகிக்கும் நான் கடந்த மே மாதம் 8-ந் தேதி கலைஞர் மேம்பாடு மற்றும் வீட்டுமனை அங்கீகாரம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனு அளித்து இருந்தேன். இதனிடையே கடந்த 4-ந் தேதி நகராட்சி மேலாளர் அன்புச்செல்வியை நேரில் சந்தித்து மனு தொடர்பான தகவலை விரைந்து வழங்கும்படியும், இல்லாத பட்சத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தேன். இதில் அதிருப்தி அடைந்த நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி, நகராட்சி தலைவர் சுமதியின் கணவர் சிவக்குமார், நகராட்சி துணைத்தலைவர் கருணாநிதி ஆகியோர் எனது கட்சி நிர்வாகிகளிடம் ஆர்.டி.ஐ. மூலம் தொல்லை கொடுத்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே கொலை மிரட்டல் விடுத்த ஜெயங்கொண்டம் நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி உள்ளிட்ட 3 பேர் மீதும் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்