< Back
மாநில செய்திகள்
மத ரீதயாக மக்களை பா.ஜ.க. மூளை சலவை செய்துள்ளது - அமைச்சர் சாமிநாதன்
மாநில செய்திகள்

'மத ரீதயாக மக்களை பா.ஜ.க. மூளை சலவை செய்துள்ளது' - அமைச்சர் சாமிநாதன்

தினத்தந்தி
|
14 May 2023 2:48 PM IST

மக்களுக்கு தெளிவு கிடைக்கும் போது பா.ஜ.க. தோல்வி அடையும் சூழ்நிலை ஏற்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் சாமிநாதன் இன்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய் அமைச்சர் சாமிநாதன், "மத ரீதயாக மக்களை மூளை சலவை செய்து பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ளனர். இதில் இருந்து மக்களுக்கு தெளிவு கிடைக்கும் போது பா.ஜ.க. தோல்வி அடையும் சூழ்நிலை ஏற்படும். அதற்கான காலம் துவங்கியிருக்கிறது என்று கருதுகிறேன்" என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்