< Back
மாநில செய்திகள்
சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை
மாநில செய்திகள்

சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை

தினத்தந்தி
|
19 Sept 2023 2:48 PM IST

தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை மேற்கு தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக எஸ்சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொடூர கொலை செய்யப்பட்டுள்ளார்.

மர்ம நபர்கள் இரவில் கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்