விழுப்புரம்
பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
|மரக்காணம் அருகே பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
பிரம்மதேசம்,
விழுப்புரம் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மரக்காணம் அடுத்த முன்னூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ஏ.டி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதர், மருத்துவ பிரிவு மாநில தலைவர் பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைக்கு பாராட்டு தெரிவிப்பது, திண்டிவனம் நகரத்தில் புதிய பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் சேவைக்கு கொண்டு வர வேண்டும், கள்ளச்சாராய விற்பனையாளர்கள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.