விழுப்புரம்
பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
|செஞ்சியில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
செஞ்சி:
செஞ்சி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் காந்தி கடை வீதியில் உள்ள வி.பி.என். வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் தங்க ராமு தலைமை தாங்கினார். மாவட்ட ஐ.டி. பிரிவு தலைவர் சத்தியசீலன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி சிறப்புரையாற்றினார். தொழில்துறை மாவட்ட துணை தலைவர் சரவணன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன், மகளிர் அணி பொதுச்செயலாளர் ஞானமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், நிர்வாகிகள் முருகன், சந்திரசேகர், ராஜேந்திரன், ஒன்றிய பொதுச்செயலாளர் சரவணன், பொருளாளர் செந்தில்குமார், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு புதிய ரெயில் பாதை அமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, செஞ்சியில் திருவண்ணாமலை சாலையில் பஸ் நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய பொதுச்செயலாளர் அமலநாதன் நன்றி கூறினார்.