< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
பா.ஜ.க. டிஜிட்டல் பேனர் கிழிப்பு
|13 Sept 2022 8:44 PM IST
செஞ்சியில்பா.ஜ.க. டிஜிட்டல் பேனரை கிழித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி,
செஞ்சி பேரூராட்சி குளக்கரை அருகே பா.ஜ.க. சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை மர்மநபர்கள் கிழித்து சேதப்படுத்தினர். இது குறித்து செஞ்சி நகர பா.ஜ.க. பொதுச்செயலாளர் அமலநாதன் செஞ்சி போலீசில் புகார் அளித்தார். அதில் பா.ஜ.க.சார்பில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களை மர்மநபர்கள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.