< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க. கொடியை அவமதித்தவரை கைது செய்யக்கோரி போலீசில் புகார்
கரூர்
மாநில செய்திகள்

பா.ஜ.க. கொடியை அவமதித்தவரை கைது செய்யக்கோரி போலீசில் புகார்

தினத்தந்தி
|
15 Jun 2023 12:12 AM IST

பா.ஜ.க. கொடியை அவமதித்தவரை கைது செய்யக்கோரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

குளித்தலை பஸ் நிலையம் அருகே காந்திசிலையை சுற்றி பல்வேறு கட்சிகளின் கொடிக்கம்பங்கள் கல்வெட்டுகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று அங்கு வந்த மருதூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான சம்பத் காந்தி சிலை அருகே இருந்த பா.ஜ.க. கொடிக்கம்பத்தின் கயிற்றை அறுத்து அதில் கட்டப்பட்டிருந்த பா.ஜ.க கட்சி கொடியை காலால் மிதித்து அவமதித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பா.ஜ.க.வினர் தங்களது கட்சி கொடியை மிதித்து அவமானப்படுத்திய சம்பத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் அமலாக்கத் துறையினரால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதின் எதிரொலியாக தி.மு.க.வினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் பா.ஜ.க. கட்சி கொடியை அவமதித்த சம்பத் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி பா.ஜ.கவினர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் செய்திகள்