< Back
மாநில செய்திகள்
அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. மையக்குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
மாநில செய்திகள்

அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. மையக்குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

தினத்தந்தி
|
19 Jun 2024 11:46 AM IST

அண்ணாமலை தலைமையில் மாநில பா.ஜ.க. மையக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாநில பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடைத்தேர்தல் பிரசாரம் தொடர்பாகவும், தமிழக சட்டப்பேரவையில் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்