< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
|18 April 2024 7:49 PM IST
தேர்தல் நடத்தி விதிமுறைகளை மீறியதாக பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் தற்போது நேற்றுடன் ஓய்ந்தது. பிரசாரம் நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் நடத்தி விதிமுறைகளை மீறி மேட்டுப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகன பேரணி சென்றதாக தேர்தல் பறக்கும்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.