< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இந்து மதத்தையும், கோவிலையும் காட்டி தமிழ்நாட்டில் பாஜகவால் ஓட்டு வாங்க முடியாது - வைகோ பேச்சு
|1 Jan 2024 6:03 PM IST
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை,
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
"சுதந்திர இந்தியாவில் நெருக்கடி நிலையைவிட மோசமான சட்டங்களை பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கிறது.
எதிர்க்கட்சிகள் உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணி, மக்கள் சக்தியைத் திரட்டி மோடி அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றும்.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் வெற்றிகரமாக நடைபெறுகிறது.
கோவிலையும், இந்து மதத்தையும் காட்டி தமிழ்நாட்டில் பாஜகவால் ஓட்டு வாங்க முடியாது என கூறிய அவர், இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய இடத்தில் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. "
இவ்வாறு அவர் கூறினார்.