< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விரைவில் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் - மத்திய இணை மந்திரி எல்.முருகன் தகவல்
|11 March 2024 1:14 AM IST
தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
நாமக்கல்,
மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று நாமக்கல்லுக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பது உறுதியான ஒன்று. மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியதால் தான், போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள நபர்கள், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.