< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தானே அறநிலையத்துறையை அகற்ற முடியும்' - கனிமொழி எம்.பி. விமர்சனம்
|8 Nov 2023 10:23 PM IST
பா.ஜ.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கோவில்களுக்கு வெளியே இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு பதாகைகள் அகற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சு குறித்து தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தானே அறநிலையத்துறையை அகற்ற முடியும். அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. எனவே அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.