< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க., அ.ம.மு.க. இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை
மாநில செய்திகள்

பா.ஜ.க., அ.ம.மு.க. இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
13 March 2024 12:54 AM IST

அமமுக எத்தனை தொகுதிகளில், எந்தெந்த இடங்களில் போட்டி என ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி தொடர்பாக கட்சிகள் இணைந்து ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பாஜக, அமமுக இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி, எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமமுக தரப்பில் கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரனுடன், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அமமுக எத்தனை தொகுதிகளில், எந்தெந்த இடங்களில் போட்டி என ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்