பா.ஜ.க. கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
|பா.ஜ.க. கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க., ஓ.பன்னீர்செல்வம் அணி, டி.டி.வி . தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பெஸ்ட் ராமசாமியின் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பா.ஜ.க. - இந்திய ஜனநாயகக் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது. இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை - இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.