< Back
மாநில செய்திகள்
பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணியில் விரிசல் இல்லை - மத்திய மந்திரி எல்.முருகன்
மாநில செய்திகள்

பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணியில் விரிசல் இல்லை - மத்திய மந்திரி எல்.முருகன்

தினத்தந்தி
|
27 March 2023 12:02 AM IST

பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணியில் விரிசல் இல்லை என மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

மதுரை வருகை

மதுரை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

காசி தமிழ் சங்கமத்தின் தொடர்ச்சியாக சவுராஷ்டிரா தமிழ் சங்கம் சார்பில் இன்னும் சில நாட்களில் குஜராத்தில் சவுராஷ்டிரா சங்கமம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இதில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த மக்கள் அங்கு செல்ல இருக்கின்றனர்.

அ.தி.மு.க. கூட்டணி

இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையேயான பிரச்சினைகளை கண்காணித்து வருகிறோம். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ராகுல்காந்தி விவகாரத்தை பொறுத்தவரை அவர் மீது எங்களுக்கு எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவ்வாறு கூறுவது தவறானது. கோர்ட்டுதான் அவருக்கு தண்டனை வழங்கி உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பா.ஜனதா-அ.தி.மு.க. உறவில் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்