< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி
|4 Nov 2023 2:29 PM IST
அடுத்தக்கட்டமாக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் கடந்த அக்டோபர் 30-ந்தேதி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றபோது, இன்றைய தினத்திற்கு(4-ந்தேதி) விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில், அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்தக்கட்டமாக சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.