< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
பா.ஜ.க. சாதனை விளக்க பிரசாரம்
|1 July 2023 12:15 AM IST
சங்கரன்கோவிலில் பா.ஜ.க. சாதனை விளக்க பிரசாரம் நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தேரடி திடலில் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரசாரம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் நகர பா.ஜ.க. தலைவர் கணேசன் வரவேற்றார். தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் நகர பொதுச்செயலாளர்கள் மணிகண்டன், கோமதிநாயகம், நகர செயலாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் சண்முகையா, ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் பால்ராஜ், நெல்லை மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, தங்கராஜ், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.