< Back
மாநில செய்திகள்
குன்னூர்: விளையாட்டு மைதானத்தில் மோதி கொண்ட காட்டெருமைகள்
மாநில செய்திகள்

குன்னூர்: விளையாட்டு மைதானத்தில் மோதி கொண்ட காட்டெருமைகள்

தினத்தந்தி
|
28 Sept 2022 7:45 PM IST

குன்னூர்:

குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகிறது.

குன்னூர் அருகே ஜிம்கானா கால்ப் மைதானம் உள்ளது. இந்த இடம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டெருமைகள் அதிக அளவு உள்ளன. இவைகள் அடிக்கடி சாலையில் சுற்றி வருகின்றன.

ஜிம்கானா கால்ப் மைதானத்தில் காலை, மாலை நேரங்களில் கால்ப் விளையாட்டுகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இன்று காலை கால்ப் விளையாட்டு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மூன்று காட்டெருமைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கால்ப் மைதானத்தில் முகாமிட்டன. இதில் இரண்டு காட்டெருமைகள் திடீரென்று சண்டையிட்டுக்கொண்டன.

இதனால் கால்ப் விளையாட்டு நிறுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் மைதானத்தில் முகாமிட்ட காட்டெருமைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது இதன் காரணமாக ஒரு மணி நேரம் அப்பகுதியில் விளையாட்டு நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.

மேலும் செய்திகள்