< Back
மாநில செய்திகள்
பசுமாடுகளுடன் காட்டெருமைகள் சண்டையிட்டதால் பரபரப்பு
நீலகிரி
மாநில செய்திகள்

பசுமாடுகளுடன் காட்டெருமைகள் சண்டையிட்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
2 July 2023 2:30 AM IST

பந்தலூரில் நடுரோட்டில் பசுமாடுகளுடன் காட்டெருமைகள் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


பந்தலூர்


பந்தலூர் ரிச்மன்ட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பந்தலூரில் இருந்து தேவாலா, நாடுகாணி, கூடலூர் செல்லும் சாலையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை ரிச்மன்ட் பகுதியில் பசுமாடுகள் நின்றிருந்தன. அப்போது 2 காட்டெருமைகள் அப்பகுதியில் முகாமிட்டு இருந்தது. அப்போது திடீரென காட்டெருமைகள், பசு மாடுகளுடன் நடுரோட்டில் சண்டையிட்டது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். பின்னர் காட்டெருமைகள் அருகில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவி மற்றும் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது.


Related Tags :
மேலும் செய்திகள்