< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
குன்னூரில் உலா வந்த காட்டெருமை
|8 Aug 2023 3:00 AM IST
குன்னூரில் உள்ள சாலையில் காட்டெருமை உலா வந்தது.
குன்னூர்
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டெருமைகள், கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்புகள், விளைநிலங்களுக்குள் புகுந்து வருகின்றன. தற்போது குன்னூர் நகர் பகுதியிலும் காட்டெருமைகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் நேற்று குன்னூர் உழவர் சந்தை பகுதியில் காட்டெருமை புகுந்தது. பின்னர் அய்யப்பன் கோவில் அருகே வந்து சாலை, குடியிருப்பு பகுதியில் நடமாடியது. இதனால் அந்த வழியாக வந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் அவர்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. அப்பகுதியில் ½ மணி நேரம் சுற்றித்திரிந்த காட்டெருமை, அதன் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.